LATEST NEWS
நடிக்க வருவதற்கு முன்பு ராஷ்மிகா எப்படி இருக்காங்க தெரியுமா?….! இதுவரை நீங்கள் கண்டிராத புகைப்படம்….!!!
கன்னட படங்களின் மூலமாக தனது சினிமா கேரியரை ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்தில் நடித்து ஃபேமஸானார். க்யூட் எக்ஸ்பிரஷன் மூலமாக ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து வரும் ராஷ்மிகா தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான புஷ்பா, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், புஷ்பா தி ரைஸ் உள்ளிட்ட பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது.தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் பாலிவுடில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இதுவரை பாலிவுட்டில் கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு மேல் புக் ஆகியுள்ளார். இதுவரை மூன்று கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ராஷ்மிகா, பாலிவுட் சென்றவுடன் நான்கு கோடி என்று தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.இது விரைவில் 5 கோடி ஆகும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா போட்டோஷூட் எடுப்பதையும் விடுவதில்லை.
கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.சினிமாவில் 2016 ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை ராஷ்மிகா பழைய புகைப்படத்தில் மிகவும் ஒல்லியாக பார்ப்பதற்கு அடையாளம் தெரியாத வகையில் இருக்கிறார். சினிமாவில் வருவதற்கு முன்பு தனது தோழிகளுடன்ரோட்டில் நடிகை ராஷ்மிகா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்.
