கொடூரம்… மனைவியைப் பலிகொடுத்த கணவன்… 19 வருஷப் பகையை முடித்த மகன்கள்… ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த பகீர் சம்பவங்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

கொடூரம்… மனைவியைப் பலிகொடுத்த கணவன்… 19 வருஷப் பகையை முடித்த மகன்கள்… ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த பகீர் சம்பவங்கள்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம் உசைத் காவல் எல்லைக்குட்பட்ட பீஹட் கிராமத்தில் செப்டம்பர் 30 காலை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. அங்கு வசித்து வரும் ஆஷிஷ் என்பவர், தனது மனைவி மோகினியைக் கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்தார். 2012-இல் திருமணமான இந்தத் தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், படுகொலைக்குப் பின் கணவர் ஆஷிஷ் குழந்தைகள் நாலவரையும் விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் காவல்துறையினரும் தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து ஆதாரங்களைச் சேகரித்து, உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டுத் தப்பியோடிய கணவரைத் தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவமாக, பிலிபித் மாவட்டம் பூரண்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பில்ஹரி கிராமத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் ஒரு படுகொலை நடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 50 வயதான வேத்ராம் என்பவர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த ராம்தேவ் மற்றும் ஷியாம்தேவ் ஆகிய இரு சகோதரர்கள் மறைந்திருந்து கூர்மையான ஆயுதங்கள் மற்றும் கோடாரியால் தாக்கி அவரை சம்பவ இடத்திலேயே கொன்றனர். வேத்ராமின் மனைவி அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, முக்கிய குற்றவாளிகளான ராம்தேவ் மற்றும் ஷியாம்தேவ் இருவரையும் கைது செய்தது.

Advertisement

காவல்துறையின் விசாரணையில், 2005-ஆம் ஆண்டு நிலப் பிரச்சினை காரணமாக வேத்ராம் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராம்தேவ் – ஷியாம்தேவ் சகோதரர்களின் தந்தையான நந்தராமைப் படுகொலை செய்தது தெரியவந்தது. அந்த வழக்கில் சிறை சென்ற வேத்ராம் 8 ஆண்டுகளுக்கு முன்புதான் தண்டனை முடிந்து வெளியே வந்திருந்தார். தந்தையின் படுகொலைக்குப் பழிவாங்க 19 ஆண்டுகளாகக் காத்திருந்த சகோதரர்கள் இருவரும், செவ்வாய்க்கிழமை வேத்ராமைத் தாக்கித் தங்கள் தந்தையின் கொலைக்குப் பழிதீர்த்துக் கொண்டனர். காவல்துறை இரு சம்பவங்கள் குறித்தும் தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in