LATEST NEWS
பிக்பாஸ் வீட்டில் இப்படி ஒரு டுவிஸ்டா?…. யாரும் எதிர்பார்க்காத போட்டியாளரை வெளியே அனுப்பும் பிக்பாஸ்…. ரசிகர்கள் ஷாக்…..!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 70 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேற இதுவரை 11 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கனா காணும் காலங்கள் என்ற பாடசாலை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் அருமையாக விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனலட்சுமி எலிமினேட் செய்ய இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. எனவே இந்த வாரம் யார் எலிமினேஷன் செய்யப்படுவார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
