தன்னை விட 27 வயது இளைய நடிகையோடு ஜோடி சேரும் தளபதி…. யார் தெரியுமா…? குஷியில் ரசிகர்கள்…!! - cinefeeds
Connect with us

CINEMA

தன்னை விட 27 வயது இளைய நடிகையோடு ஜோடி சேரும் தளபதி…. யார் தெரியுமா…? குஷியில் ரசிகர்கள்…!!

Published

on

தமிழ் திரையுலகில் மிகவும் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தளபதி விஜய் என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போது “கோட்” படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தையடுத்து எச்.வினோத் இயக்கும் “தளபதி 69” படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் அரசியலில் ஈடுபடுவதற்கான பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது தளபதி 69 படத்திற்கான ஆரம்ப பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இதில் நடிப்பதற்கு பிரபல நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் தகவலானது இணையத்தில் வெளியாகி வருகிறது. இதனால் அவர்தான் இந்த படத்தின் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மலையாள நடிகையான மமீதா பைஜு தேர்வாகி இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.

Advertisement

மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழிலும் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகை மமிதா பைஜு சூப்பர் சரண்யா என்ற படத்தில் மூலமாக அறிமுகமானார். இவர் சமீபத்தில் வெளியான பிரேமலு என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement