CRIME
“போலீஸ் முன்னாடியே இப்படியா…?” பெண் ஆவணத்தில் கையெழுத்திட்ட அடுத்த நொடி.. பெண் டாக்டரை தாக்கிய குற்றவாளி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் உள்ள தலேகான் முதன்மை சுகாதார நிலையத்தில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட காதிர் அலி என்ற குற்றவாளி, அங்கிருந்த பெண் மருத்துவர் டாக்டர் ஸ்ரத்தா பும்ரேவை எதிர்பாராதவிதமாக ஓங்கி அறைந்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மருத்துவப் பரிசோதனை முடிந்து ஆவணங்களில் கையெழுத்திட்ட பிறகு, அந்த நபர் திடீரென பெண் மருத்துவரைத் தாக்கியது அங்கிருந்தவர்களையே உரைய வைத்துள்ளது.
இந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் மருத்துவர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மருத்துவச் சமூகம், தங்களுக்கு உரிய மற்றும் கடுமையான பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், வெளிநோயாளிப் பிரிவு சேவைகளை முற்றிலும் நிறுத்தப் போவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
