LATEST NEWS
இந்த 43 கோடி தான் உங்களுக்கு தெரியும்.. ஆனா அப்பவே கேப்டன் குடும்பத்தினரிடம் 100 கோடி மோசடி..? பகீர் கிளப்பிய மூத்த பத்திரிக்கையாளர்..!!

பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல் நல குறைவால் உயிரிழந்தார். இவரது மைத்துனர் எல்.கே சுதீஷ். அவருக்கு பூரண ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பூரண ஜோதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில் எனக்கும் எனது கணவருக்கும் சொந்தமாக சென்னை மாதவரம் மெயின் ரோட்டில் 2.10 ஏக்கரில் நிலம் இருந்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மாவை அணுகி அந்த இடத்தில் வீடு கட்டி விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்தோம்.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் எங்களது நிலத்தில் 234 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டலாம். மேலும் அதில் 78 வீடுகளை எனக்கும், மீதி உள்ள 156 வீடுகளை கட்டுமான நிறுவன உரிமையாளரும் எடுத்துக் கொள்ள ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் சந்தோஷ் ஷர்மா எனக்கு ஒதுக்கப்பட வேண்டிய 78 வீடுகளில் 48 வீடுகளை எனது கையெழுத்தை போலியாக போட்டு விற்பனை செய்து 43 கோடி மோசடி செய்துள்ளார். ஒரே வீட்டை பலருக்கு விற்பனை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இது குறித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டார்.
அந்த புகாரின் பெயரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர்களான சந்தோஷ் சர்மா, சாகர் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மூத்த பத்திரிகையாளரான பாண்டியன் கடந்த 2015-ஆம் ஆண்டு சுதீஷிடம் வட இந்திய கம்பெனி 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தான் ஏற்கனவே கேள்விப்பட்டேன் என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
43 கோடி ரூபாய் ஏமாந்து நிற்கும் கேப்டன் குடும்பம்,சுதீஷை ஏமாற்றிய கும்பல். JOURNALIST PANDIAN #DMDK #premallathavijayakanth #vijayakanth #ADMK_TRY #sudeesh #sasikala 🔴https://t.co/jHxqpB9kO2 pic.twitter.com/WVWQqc5soy
— Retroluxe (@retroluxe_off) February 24, 2024