“என் குழந்தைங்க பெயரே எனக்குத் தெரியாது..” 4 மனைவிகள்… 58 பிள்ளைகளுடன் தவிக்கும் மனிதனின் அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் குழந்தைங்க பெயரே எனக்குத் தெரியாது..” 4 மனைவிகள்… 58 பிள்ளைகளுடன் தவிக்கும் மனிதனின் அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

அஃப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தைச் சேர்ந்த 57 வயதான முஹம்மது சாதிக் என்பவருக்கு நான்கு மனைவிகள் மூலம் மொத்தம் 58 குழந்தைகள் உயிருடன் வாழ்கின்றனர். இதுவரை இவருக்கு பிறந்த 70 குழந்தைகளில் 12 குழந்தைகள் இறந்துவிட்ட நிலையில், இவரது இளைய குழந்தைக்கு இப்போதுதான் மூன்று மாதங்கள் ஆகின்றன. இத்தனை பெரிய குடும்பத்தைக் கொண்ட சாதிக், தனது குழந்தைகள் அனைவரின் பெயர்களையும் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் திணறுவதாகவும், பெரும்பாலான நேரங்களில் அவர்களை “மகனே” அல்லது “குழந்தையே” என்றே அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடுமையான வறுமையில் வாடும் இக்குடும்பத்திற்கு உணவளிப்பதே மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. கார் விற்பனையகம் ஒன்றில் வேலை செய்யும் சாதிக், ஒரு கார் விற்பனையானால் மட்டுமே சுமார் 1,000 அஃப்கானி (சுமார் $15 டாலர்) வரை வருமானம் ஈட்டுகிறார். இந்தக் குறைந்த வருமானத்தைக் கொண்டு குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடிவதில்லை. இதனால் குழந்தைகள் பல நேரங்களில் வெறும் கால்களுடன் உலாவுவதும், உணவின்றிப் பட்டினியோடு உறங்கச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது. சமையலுக்கு விறகு வாங்கக் கூட பணமில்லாததால், குழந்தைகள் காகிதங்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து எடுத்துவந்து எரிக்கப் பயன்படுத்துகின்றனர்.

Advertisement

முறைப்படியான கதவுகளோ ஜன்னல்களோ இல்லாத இவர்களது வீட்டில், வெறும் மெல்லிய திரைகளே வெளியுலகில் இருந்து பாதுகாப்பாகப் பயன்படுகின்றன. கடும் குளிர்காலத்தில் ஒரே மெல்லிய போர்வையின் கீழ் 6 முதல் 7 குழந்தைகள் வரை படுத்து உறங்கும் அவலநிலையும் உள்ளது. சிறு வயதிலேயே மனைவிகளைத் திருமணம் செய்துகொண்டதாலும், அவர்களுக்குக் குழந்தைகளைப் பராமரிக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் முந்தைய குழந்தைகள் காசநோய், தட்டம்மை போன்ற நோய்களால் உயிரிழந்ததாக சாதிக் வருத்தத்துடன் கூறுகிறார். தற்போது தன் குழந்தைகளுக்குப் போதிய உணவும், நல்ல கல்வியும் கிடைக்க அரசாங்கமும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in