CRIME
பாவம் அந்த மனுஷன்… மதுவில் மயக்க மருந்து கலந்து.. கள்ளகாதலனோடு சேர்ந்து மனைவி செய்த கொடூரமான காரியம்.. நடுநடுங்கவைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பக்பத் பகுதியில், கள்ளக்காதலனுக்குத் தடையாக இருந்த விவசாயி கணவனை, மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். விவசாயியான பிரமோத் என்பவரின் வீட்டில், சிக்கந்தர் என்ற பைக் மெக்கானிக் வாடகைக்குக் கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், பிரமோத்தின் மனைவிக்கும் சிக்கந்தருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததை பிரமோத் கண்டுபிடித்துள்ளார்.
இதனால் தங்களது கள்ளக்காதலுக்குப் பிரமோத் தடையாக இருப்பார் என்று கருதிய அவரது மனைவி, கள்ளக்காதலன் சிக்கந்தருடன் சேர்ந்து அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, ஊரில் நடைபெற்ற ராம்லீலா விழாவிற்குப் பிரமோத் சென்றிருந்தபோது, அங்கிருந்த அவரை சிக்கந்தர் நயமாகப் பேசி, மது அருந்தலாம் என்று கூறி அருகில் உள்ள ஒரு ஆழ்துளைக் கிணறு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பிரமோத் குடித்த மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவர் மயங்கியதும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
கொலையை முடித்த பின்பு, எதுவும் தெரியாதது போல சிக்கந்தர் மீண்டும் ராம்லீலா விழாவிற்குத் திரும்பியுள்ளார். மறுநாள் காலை பிரமோத்தின் உடல் அங்குள்ள ஒரு விவசாய வயலில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர், கடந்த செவ்வாய்க்கிழமை இந்தத் திட்டமிட்ட கொலைச் சதியை அம்பலப்படுத்தி, பிரமோத்தின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் சிக்கந்தர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
