CRIME
“உல்லாசமா இருக்க கூப்பிட்டா” நான் 4 பவுன் நகைக்காக அவளை கொன்றேன்… பெருந்துறை நர்ஸ் கொலையில் திடீர் திருப்பம்.. கைதான வாலிபர் பகீர் வாக்குமூலம்..!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நர்ஸ் உத்திரா (26) படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் பணிபுரிந்த சக ஊழியரான சரவணன் (23) என்பவரைப் பெருந்துறை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த உத்திராவிற்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. அவர் தனது கணவர் ரஞ்சித்குமாருடன் திருப்பூர் பல்லகவுண்டன்பாளையத்தில் வசித்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் 3ஆம் தேதி முதல் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி வேலைக்குச் சென்ற உத்திரா இரவு வீடு திரும்பவில்லை. கணவர் ரஞ்சித்குமார் தேடியபோது, அவர் மருத்துவமனையிலிருந்து முன்னதாகவே புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 17 அன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் டோல்கேட் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் உத்திரா நிர்வாண நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்துக் கொலையாளியைத் தேடி வந்தனர்.
விசாரணையில் உத்திரா வேலை பார்த்த அதே மருத்துவமனையில் பணியாற்றிய திருப்பூரைச் சேர்ந்த சரவணன் (23) என்பவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், “உல்லாசமாக இருக்கலாம் என்று உத்திரா என்னை அழைத்தார். அதனால் அவரிடம் இருக்கும் நகையைப் பறித்துக் கொள்ள திட்டமிட்டு எனது பைக்கில் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு உத்திராவின் துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்தேன்” என்று அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
