LATEST NEWS
ஈரான் சிறையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்? – இணையத்தைக் குலுக்கும் வீடியோவால் உலகளவில் வெடித்த பரபரப்பு..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது. ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து இந்த வீடியோ பரவி வருவதால், சர்வதேச அளவில் இது பெரும் பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், உண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தெஹ்ரானில் உள்ள தஜ்ரிஷ் சதுக்கத்தில் பொதுமக்களின் பார்வைக்காக ஒரு தற்காலிகப் போலி சிறைக் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறைக்குள் டிரம்ப் போன்ற முகமூடி மற்றும் ஆடைகளை அணிந்த நபர் ஒருவர் அடைக்கப்பட்டு இருப்பது போலக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு சர்வதேச அரசியல் நகர்வுகள் மற்றும் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சிக்கும் வகையிலேயே இந்த விசித்திரமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வினோதமான காட்சியைக் காண்பதற்காக அந்தச் சதுக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். அங்கு வருபவர்கள் பலரும் இதனைத் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதால், இந்த வீடியோ தற்போது உலகளவில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.
