“நெருங்கிய நண்பனுடன் கள்ளக்காதல்” கணவருக்கு விஷ ஊசி போட்டுக் கொன்றுவிட்டு நாடகமாடிய பாசக்கார மனைவி.. கல்குவாரிக்குள் காத்திருந்த அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நெருங்கிய நண்பனுடன் கள்ளக்காதல்” கணவருக்கு விஷ ஊசி போட்டுக் கொன்றுவிட்டு நாடகமாடிய பாசக்கார மனைவி.. கல்குவாரிக்குள் காத்திருந்த அதிர்ச்சி..!!

Published

on

ஜார்க்கண்ட் மாநிலம் கோடெர்மா பகுதியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலனான போலி மருத்துவரை வைத்து விஷ ஊசி போட்டுக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நரேஷ் தாகூர் என்பவரின் மனைவி கிரண் தேவி மற்றும் அவரது கள்ளக்காதலனான போலி மருத்துவர் சுனில் தாகூர் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சுனில் தாகூர் கொலை செய்யப்பட்ட நரேஷின் நெருங்கிய நண்பர் என்பதும், இதன் காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கிரண் தேவியுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த விவகாரம் நரேஷுக்குத் தெரியவந்து அவர் கண்டித்ததால், அவரைக் கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, திட்டமிட்டபடி நரேஷுக்குத் தவறான முறையில் ஊசி செலுத்தி இந்த கொடூரக் கொலையைச் செய்துள்ளனர்.

Advertisement

பின்னர் குற்றத்தை மறைப்பதற்காகச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் கைவிடப்பட்ட ஒரு குவாரிக் குழியில் வீசிச் சென்றுள்ளனர். போலீசாருக்குச் சந்தேகம் வராமல் இருக்க, கிரண் தேவி தனது கணவரைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, குவாரியிலிருந்து சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து தனிப்படை அமைத்துப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கிரண் தேவியின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது இந்த கொலைச் சம்பவம் அம்பலமாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in