“வெறும் ரூ.1-க்காக இப்படியா..?” ஆடைகளை கிழித்து இளைஞரை அரை உயிராக்கிய கொடூரம்.. கடைக்காரரின் வெறிச்செயல்.. தசரா திருவிழாவில் நடந்த பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“வெறும் ரூ.1-க்காக இப்படியா..?” ஆடைகளை கிழித்து இளைஞரை அரை உயிராக்கிய கொடூரம்.. கடைக்காரரின் வெறிச்செயல்.. தசரா திருவிழாவில் நடந்த பயங்கரம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் வெறும் தகராறுக்காக தீபேந்திர கத்தியார் என்ற வாலிபர் கடைக்காரர் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். தசரா திருவிழாவைக் கண்டுவிட்டுத் திரும்பிய தீபேந்திரா, அங்குள்ள கடைக்காரர் அமித் குப்தா என்பவரிடம் ஒரு பொருளை வாங்கியுள்ளார். அப்போது அந்தப் பொருளின் அசல் விலையை விட ரூ.1 கூடுதலாகக் கடைக்காரர் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தீபேந்திரா கேள்வி எழுப்பியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சாதாரண வாக்குவாதம் எல்லை மீறிச் சென்ற நிலையில், கடைக்காரர் அமித் குப்தா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தீபேந்திராவை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். தாக்குதலின் போது தீபேந்திராவின் ஆடைகள் கிழிக்கப்பட்டதுடன், தடிகளால் அவர் சுயநினைவிழக்கும் வரை அடித்துத் துவைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், உள்ளூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in