விஜய் அடுத்த பிரதமரா..? ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவில் சிக்கிய தவெக…? காங்கிரஸ் நிர்வாகி கனகராஜ் கிளப்பிய பகீர் சந்தேகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் அடுத்த பிரதமரா..? ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவில் சிக்கிய தவெக…? காங்கிரஸ் நிர்வாகி கனகராஜ் கிளப்பிய பகீர் சந்தேகம்..!!

Published

on

ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவில் தமிழக வெற்றிக் கழகம் இயங்குகிறதோ என்ற பலத்த சந்தேகம் எழுவதாகக் காங்கிரஸ் நிர்வாகி கனகராஜ் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ஒரு நபர் நாட்டின் பிரதமர் ஆக வேண்டும் என்றால், ராகுல் காந்தியைப் போல மதவாத சக்திகளையும், ஆர்.எஸ்.எஸ் கோட்பாடுகளையும் துணிச்சலுடன் எதிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதை விடுத்து, அடுத்த பிரதமர் விஜய் தான் என்று பரப்புரை செய்வதன் மூலம், தவெக கட்சி ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவிற்குள் சென்றுவிட்டதோ என்ற கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே உள்ள வலுவான உறவை முறிக்க சதி நடந்தது போல, தற்போது தவெக மற்றும் காங்கிரஸ் இடையேயான உறவையும் துண்டிக்க ஏதேனும் சதித்திட்டம் தீட்டப்படுகிறதோ என்று தோன்றுவதாகவும் கனகராஜ் மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in