LATEST NEWS
டேஷ் முதலமைச்சர், வாயில நல்லா வந்துரும்… கொத்துபுரோட்டா போடுவேன்… உங்களுக்கு புரியும்படி சொல்லனும்னா..? முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி..!!
திமுக அரசு கொண்டுவந்த பல்வேறு நலத்திட்டங்களை தற்போதைய முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்து வருவதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். மேலும், இந்தச் செயல்பாட்டைப் பொதுமக்களுக்குப் புரியும் வகையில் விளக்கிய அவர், “ஊரான் வீட்டு நெய்யே… விஜய் ஸ்வீட் செய்துகொண்டு இருக்கிறார்” என்று பழமொழியைச் சற்றே மாற்றி கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து முதலமைச்சரின் பேச்சுவழக்கு மற்றும் அரசியல் பாணியைச் சாடிய உதயநிதி ஸ்டாலின், “அவர் பாஷை என்னவென்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். டேஷ் முதலமைச்சர், வாயில நல்லா வந்துரும், கொத்துபுரோட்டா போடுவேன்; இதுதான் அவருடைய பாஷை” என்று மிகக் காட்டமாகப் பேசினார். முதலமைச்சரின் கடந்தகாலப் பேச்சுக்களைக் குறிப்பிட்டு, அதே பாணியில் அவரைத் தாக்கிப் பேசியது அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தஞ்சாவூரில் நடைபெற்ற திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் செயல்பாடுகளையும் காவிரி நீர் உரிமையில் காட்டும் மெத்தனப் போக்கையும் விமர்சிக்கும் போதே இந்த அரசியல் ரீதியிலான தனிநபர் தாக்குதலையும் முன்னெடுத்தார். இக்கூட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், விவசாயிகளின் வேதனைகளைப் புரிந்துகொள்ளாத முதலமைச்சருக்கு எதிராகவும் திமுகவினர் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.
