அட்லீயையே ஓரம் கட்டிய ஆர்.ஜே.பாலாஜி…! ‘கருப்பு’ படத்தில் இவ்வளவு காப்பியா…!தியேட்டரே அதிர்ந்த சூர்யாவின் ‘கருப்பசாமி’ அவதாரம்.. ஆனா அது அப்படியே அந்த கொரியன் சீரிஸா…!ஷாக்கான ரசிகர்கள் …! – cinefeeds
Connect with us

CINEMA

அட்லீயையே ஓரம் கட்டிய ஆர்.ஜே.பாலாஜி…! ‘கருப்பு’ படத்தில் இவ்வளவு காப்பியா…!தியேட்டரே அதிர்ந்த சூர்யாவின் ‘கருப்பசாமி’ அவதாரம்.. ஆனா அது அப்படியே அந்த கொரியன் சீரிஸா…!ஷாக்கான ரசிகர்கள் …!

Published

on

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனையைப் படைத்து வருகிறது. சூர்யாவின் அதிரடி நடிப்புக்கும், ஆர்.ஜே. பாலாஜியின் திரைக்கதைக்கும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழுவினர் ஒட்டுமொத்தமாகப் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். தியேட்டர்களில் திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி வரும் அதே வேளையில், மறுபுறம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இப்படத்தை ஓப்பனாகவே போட்டுத் தாளித்து வருகின்றனர்.

இப்படத்தின் பல முக்கிய காட்சிகள் இந்திய சினிமா, ஹாலிவுட், மற்றும் கொரியன் வெப் சீரிஸ்களில் இருந்து அப்பட்டமாக ‘உருவப்பட்டவை’ என்று நெட்டிசன்கள் ஆதாரங்களுடன் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, படத்தின் இரண்டாம் பாதியில் கருப்பசாமியாக வரும் சூர்யா, ஓடி வரும் ஒரு காரையே இரண்டாக வெட்டும் மாஸான காட்சிக்கு தியேட்டரில் சில்லறைகள் சிதறின. ஆனால், இந்த அதிரடி காட்சி ‘காப்ளின்’ என்ற புகழ்பெற்ற கொரியன் வெப் சீரிஸில் வரும் காட்சியை அப்படியே அட்டை காப்பி அடித்தது என்று நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். காருக்குள் இருப்பவர்களின் சட்டை கிழிவது முதற்கொண்டு அனைத்தும் அப்படியே நகலெடுக்கப்பட்டுள்ளதை ஒப்பிட்டு, சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மியும் ஆர்.ஜே. பாலாஜியை சாடிப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

இப்படி ‘கட் காப்பி பேஸ்ட்’ விமர்சனங்கள் எழும்போது, மற்றொரு இணையவாசியோ ஆர்.ஜே. பாலாஜியின் முந்தைய படமான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தையும் இதனுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். பிரபல ஹிந்தி படமான ‘பி.கே’ (PK) படத்தின் கதையை முறையான ரைட்ஸ் வாங்க வசதி இல்லாததால், ஏலியன் கதாபாத்திரத்திற்குப் பதிலாக அம்மன் கதாபாத்திரத்தை மாற்றி வைத்ததாக ஆர்.ஜே. பாலாஜியே ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டதை நெட்டிசன்கள் தற்போது சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர். ஆரம்பம் முதலே இவருடைய படங்களில் பிற மொழிப் படங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுவது வழக்கமாகிவிட்டது.

இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய், தமிழ் சினிமாவில் பிற படங்களின் காட்சிகளைத் தழுவி எடுப்பதில் முதன்மையானவராகக் கருதப்படும் இயக்குநர் அட்லீயையே ஆர்.ஜே. பாலாஜி ஓரம் கட்டிவிட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். “காப்பி அடிப்பது என்றால் அது அட்லீ தான் என்று நினைத்தோம், ஆனால் அவரை விட ஆர்.ஜே. பாலாஜி பயங்கரமான கில்லாடியாக இருக்கிறாரே” என்று சமூக வலைதளங்களில் மீம்களைப் பறக்கவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். 150 கோடி வசூல் என்ற இமாலய சாதனை ஒருபுறம் இருந்தாலும், இந்த ‘காப்பி’ சர்ச்சைகள் ‘கருப்பு’ படத்திற்கு இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in