LATEST NEWS
பட்டுப்புடவையில்….. சொக்க வைக்கும் அழகில்….. ரசிகர்களை மயக்கிய வாணி போஜன்….! லேட்டஸ்ட் போட்டோஸ்…!!!
சின்னத்திரையில் குட்டி நயன்தாரா என்று அழைக்கப்படுபவர் வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் என்ற தொடரின் மூலமாக மக்களின் மனதில் இடம் பிடித்தவர். சின்னத்திரையில் பிரபல நடிகையாக வளம் வந்த இவர் அப்படியே வெள்ளி திரைக்கு தாவினார். அவருக்கு சில வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பெரும்பாலான படங்களில் செகண்ட் ஹீரோயின் என்ற வகையிலேயே நடித்து வந்தார்.
ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர் அதன் பிறகு விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தின் நடித்திருந்தார்.அந்த படத்தில் இவரின் காட்சிகள் பெரும்பாலும் நீக்கப்பட்ட காரணத்தினால் செம கடுப்பான இவர் இனிமேல் இரண்டாவது ஹீரோயின் என்ற சப்ஜெக்டில் நான் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துவிட்டார். அதன் பிறகு அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் வாணி போஜன் நடித்துள்ளார்.
தற்போது பிசியாக நடித்து வரும் வாணி போஜன் தொடர்ந்து போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இவருக்கு சேலை கட்டுவது என்பது மிகவும் பிடிக்கும். இதனால் தொடர்ந்து சேலையில் போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது ஆஷ் கலர் சேலையில் பர்ப்பில் நிற ஜாக்கெட் போட்டு இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
