விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு… மகன் சொன்ன தகவலால் கலங்கும் தொண்டர்கள்… அவருக்கு என்ன ஆச்சு..?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு… மகன் சொன்ன தகவலால் கலங்கும் தொண்டர்கள்… அவருக்கு என்ன ஆச்சு..??

Published

on

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் ஆக்சன் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வெற்றி தான். அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுபவர். நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த். அப்படிப்பட்ட சிறந்த ஹீரோவாக விளங்கிய விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

அது மட்டுமல்லாமல் சமீபத்தில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவர் ரசிகர்களை சந்தித்தபோது அமரக்கூட முடியாமல் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தார். அதனைக் கண்ட தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் கண்கலங்கி நின்றனர். அதனால் அரசியல் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் மகன் பிரபாகரன் ஆகியோர் பார்த்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, கேப்டன் விஜயகாந்தின் உடல் நலத்தில் சற்று பின்னடைவு தான், ஆனால் கேப்டன் விஜயகாந்த் 100 வருடம் நன்றாக இருப்பார். அவர் பழையபடி பேசுவார் எழுந்து வருவார் எனவும் அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். உங்களைப் போலவே நாங்களும் நம்புகிறோம். இப்போது வரை கேப்டன் நலமாக தான் உள்ளார் என்று விஜய் பிரபாகரன் பேசியுள்ளார். தற்போது இவர் கூறியுள்ள இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in