LATEST NEWS
தன்னைவிட இளையவரான முதலமைச்சர் யோகி காலில் விழுந்ததற்கான காரணம் என்ன?… நடிகர் ரஜினி விளக்கம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இமயமலை சுற்றுப்பயணம் சென்ற ரஜினி சமீபத்தில் உத்திரபிரதேசம் சென்றார். அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் திரைப்படத்தை பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் யோகி ஆதித்யநாத் வராததால் அந்த மாநில துணை முதல்வருடன் ரஜினி ஜெயிலர் திரைப்படம் பார்த்தார்.
பிறகு உத்திரபிரதேச மாநில முதல்வரை சந்திக்க நேரில் சென்ற ரஜினி அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஜினிக்கு தற்போது 72 வயது ஆகும் நிலையில் 51 வயதான யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினி வழங்கியதை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் ரஜினியின் நேற்று சென்னை திரும்பிய நிலையில் அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததற்கு ரஜினி விளக்கம் அளித்தார். அதில், என்னை விட வயது குறைவாக இருந்தாலும் சன்னியாசி காலில் விழுவது என் வழக்கம். அதை தான் நான் செய்தேன் என்று கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதா திரைப்படத்தை ஹிட் ஆகிய தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் கூறினார்