LATEST NEWS
வித்தியாசமான முறையில் காதலியை கரம் பிடிக்கும் அசோக் செல்வன்.. இணையத்தில் வைரலாகும் திருமண அழைப்பிதழ்..!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் நடிகர் அசோக் செல்வன். இவர் நடித்த ஓ மை கடவுளே, போர் தொழில் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கீர்த்தி பாண்டியன் அன்பிற்கினியால் மற்றும் தும்பா என ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்துள்ளார். இவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் மகள். இதனிடையே அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்ந்ததற்கு முக்கிய காரணம் பா. ரஞ்சித் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இவர் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன் ஹீரோயினியாக நடிக்கின்றார். இந்தத் திரைப்படத்தின் சூட்டிங் நடைபெறும் போது தான் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமண அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இன்டேரி என்ற கிராமத்தில் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி அருண்பாண்டியனின் பண்ணை வீட்டில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் பசுமை விருந்து பரிமாறப்படும் எனவும் அந்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தற்போது அது வைரலாகி வருகிறது.
