“மேடையில அந்த இடத்துல கை வச்சுட்டாங்க, பயங்கரமான வலி”… தவறாக நடந்த ரசிகை பற்றி பகிர்ந்த துல்கர் சல்மான்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“மேடையில அந்த இடத்துல கை வச்சுட்டாங்க, பயங்கரமான வலி”… தவறாக நடந்த ரசிகை பற்றி பகிர்ந்த துல்கர் சல்மான்..!!

Published

on

மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மம்மூட்டியின் மகன்தான் துல்கர் சல்மான். இவர் தற்போது பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். மலையாளம் மற்றும் தமிழ் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிஸியான நடிகராக நடித்து வருகின்றார். தற்போது கிங் ஆப் கோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகளில் துல்கர் சல்மான் ஈடுபட்டு வரும் நிலையில் இவரின் சமீபத்திய பேட்டியில் அவரது மோசமான ரசிகர் சந்திப்பு பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த துல்கர் சல்மான், ஒரு வயதான பெண் எதற்காக என தெரியவில்லை அவ்வளவு மோசமாக என்னிடம் நடந்து கொண்டார். என் பின்னால் அந்த இடத்தில் கை வைத்து அழுத்தினார். எனக்கு பயங்கரமான வலி. மேடையில் பலரும் இருந்தனர். ஆன்ட்டி தயவு செஞ்சு அங்க போய் நில்லுங்க என்று அவரிடம் சொல்ல நினைத்தேன்.

Advertisement

அந்த அளவிற்கு அவர் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார். பலரும் கையை எங்கே வைப்பது என்று தெரியாமல் பின்னால் வைக்கின்றனர். இந்த சம்பவத்தின் போது போட்டோவுக்கு கூட என்னால் ஸ்மைல் செய்ய முடியாமல் நின்றேன் என துல்கர் சல்மான் மோசமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in