LATEST NEWS
யானை மிதித்து சாகுற நிலைமையில இருந்தப்ப கூட.. என்ன அங்க தொட்டு சுகம் கண்டாங்க.. கண்ணீர் மல்க சீரியல் நடிகை அளித்த பேட்டி..!!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சந்தியா ஜகர்ல முடி. சன் டிவியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் பெரிய அளவில் ஹிட்டான வம்சம் என்ற சீரியலில் பூமிக்காக கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இவர். அதுமட்டுமல்லாமல் சந்திரலேகா போன்ற பல சீரியல்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் சீரியல் பக்கம் வராமல் தெருநாய்களை பாதுகாத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். இவர் அண்மையில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகவும் சோகமான விஷயம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் செல்லமடி நீ எனக்கு டைட்டில் பாடல் கோவில் யானையுடன் எடுக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த யானை என்னை மிகவும் மோசமாக தாக்கியதால் எனக்கு ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில பாகங்களையும் அகற்ற நேர்ந்தது. தும்பிக்கையால் என்னை நசுக்கிய நிலையில் உயிர்பிழைத்ததே பெரிய விஷயம் தான். அந்த சமயத்தில் என்னால் வலி தாங்க முடியாமல் நான் துடிதுடித்துக் கொண்டிருந்த போது அங்கிருந்த சிலர் என்னை தூக்கிக்கொண்டு ஓடினர்.
அந்த சமயத்தில் என்னை தூக்கிக் கொண்டு போன டான்ஸர்களில் ஒருவன் நான் வழியில் துடித்துக் கொண்டிருந்தபோது எனக்கு உதவி செய்வது போல நடித்து என்னுடைய மார்பில் கை வைத்து சுகம் கண்டான். என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற மிகவும் கஷ்டமான விஷயம் என்றால் இதை தான் நான் கூறுவேன் என்று கண்ணீர் மல்க அவர் பேட்டி அளித்துள்ளார்.