“பிணத்தை எடுக்கக்கூடாதுப்பா” செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு..! தாயின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் கிராமம்.. வீட்டிலேயே பிணத்துடன் கதறும் பிள்ளைகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பிணத்தை எடுக்கக்கூடாதுப்பா” செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு..! தாயின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் கிராமம்.. வீட்டிலேயே பிணத்துடன் கதறும் பிள்ளைகள்..!!

Published

on

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் என்பவரது குடும்பம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவர்களது சொந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றை, பஞ்சாயத்து அனுமதியின்றிச் சரிசெய்து பயன்படுத்தியதற்காக ஊர் நிர்வாகம் ₹3 லட்சம் அபராதமும், 3 சென்ட் இடமும் கேட்டு ஊர்க்கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனை ஏற்க மறுத்ததால், கிராமத்தில் உள்ள யாரும் இவர்களுடன் பேசக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டு அந்தக் குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது.

இந்தச் சூழலில், சின்னையனின் மனைவி தனபாக்கியம் நேற்று உயிரிழந்தார். ஆனால், ஊர்க்கட்டுப்பாடு காரணமாக அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்கவோ, சடலத்தை எடுக்கவோ கிராம மக்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், உடலைப் புதைப்பதற்கு மயானத்தில் இடம் வழங்கவும் ஊர் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதால் அந்தக் குடும்பம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

Advertisement

இறந்த தாயின் உடலை அடக்கம் செய்ய முடியாமல், சடலத்தை வீட்டிலேயே வைத்துக்கொண்டு அவரது பிள்ளைகளான செந்தில்குமார், பாலகிருஷ்ணன் மற்றும் செல்வி ஆகியோர் செய்வதறியாது கதறி அழுகின்றனர். உயிரிழந்த பிறகும் தொடரும் இந்தக் கடுமையான ஊர்க்கட்டுப்பாடு கல்வராயன்மலைப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in