“பணம் கட்டும் வரை 4 மணி நேரம் சிகிச்சை தரல” மருத்துவர்களால் தான் என் நண்பன் செத்துட்டான்.. தனியார் மருத்துவமனை அலட்சியம் குறித்து கதறிய உயிர்த்தோழன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பணம் கட்டும் வரை 4 மணி நேரம் சிகிச்சை தரல” மருத்துவர்களால் தான் என் நண்பன் செத்துட்டான்.. தனியார் மருத்துவமனை அலட்சியம் குறித்து கதறிய உயிர்த்தோழன்..!!

Published

on

பெங்களூரு யஷ்வந்த்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், 22 வயது இளைஞர் ஷாஹீன் முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்ததாகக் கூறி அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தட்சிண கன்னடா மாவட்டத்தைப் சேர்ந்த ஷாஹீன், கடுமையான ரத்த வாந்தி மற்றும் காய்ச்சல் காரணமாக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காப்பீட்டுத் தொகையைத் தாண்டி கூடுதலாக ₹5 லட்சம் பணம் செலுத்தக் கோரி, மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சையைத் தாமதப்படுத்தியதே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்று அவரது நண்பர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் நண்பர் சித்தார்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஷாஹீனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாய சூழல் இருந்தும், பணம் மற்றும் காப்பீட்டு நடைமுறைகளைக் காரணம் காட்டி மருத்துவர்கள் சிகிச்சையை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர் என்று கண்ணீருடன் தெரிவித்தார். குடும்பத்தினர் பெரும் போராட்டத்திற்குப் பின் ₹50,000 ரொக்கம் செலுத்திய பிறகே சிகிச்சை தொடங்கப்பட்டதாகவும், ஆனால் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு (ICU) அழைத்துச் சென்ற சில நிமிடங்களிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

Advertisement

மருத்துவமனையின் பேராசை மற்றும் மருத்துவர்களின் அஜாக்கிரதையால்தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என்று கூறி உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தச் சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பதற்றமும் மோதல் சூழலும் உருவானதைத் தொடர்ந்து, எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்காக யஷ்வந்த்பூர் காவல் துறையினர் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பை ஏவியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in