LATEST NEWS
15 வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் கமல்… அதுவும் இப்படி ஒரு கெட்டப்பில்… சூப்பர் அப்டேட்…!!!
தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். உலக அளவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் சுமார் 450 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் பிசியாக நடித்து வருகிறார்.
இயக்குனர் சங்கர் இயக்கும் இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது ஸ்கெட்ச் வினோத் இயக்கத்தில் தனது 233 வது படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். அதன் பிறகு மணிரத்தினம் இயக்கம் 234 ஆவது திரைப்படத்தில் கமல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் பெண் வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கமல் அவ்வை சண்முகி மற்றும் தசாவதாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் பெண்ணாக நடித்திருந்தார். தசாவதாரம் திரைப்படம் வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் அவரது நடிப்பு எப்படி இருக்க போகிறது என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
