நீ ஆகாயத்தில் மிதக்காதே… நிஜ வாழ்க்கைக்கு வா… தனது காதல் பற்றி கூறிய விருமாண்டி பட நடிகை… - cinefeeds
Connect with us

LATEST NEWS

நீ ஆகாயத்தில் மிதக்காதே… நிஜ வாழ்க்கைக்கு வா… தனது காதல் பற்றி கூறிய விருமாண்டி பட நடிகை…

Published

on

தமிழ் திரை உலகில் 90களில் மிகப் பிரபலமாக வலம் வந்தவர் நடிகை அபிராமி. இவர் 1995 ஆம் ஆண்டு ‘கதபுருஷன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக  முதலில்  திரையுலகில் அறிமுகமானார்.இவர் 2001 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘வானவில்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.இப்படமானது  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் பல வாய்ப்புகள் கிடைத்தனார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் 2004ஆம் ஆண்டு  வெளியான  ‘விருமாண்டி படத்தில்’ கதாநாயகியாக  நடித்துள்ளார்.அபிராமிக்கு  இப்படமானது  திரையுலக பயணத்திற்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.இவர்  தமிழில் மிடில் கிளாஸ், மாதவன் ,தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இதன்பின் அவருக்கு திரையுலகில் வாய்ப்பு குறைந்த நிலையில் ஆசியா நெட் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.நடிகை அபிராமி கேரளாவில் மிகப் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.திருமணம் செய்த பிறகும் திரையுலகை இருந்து விட்டு விலகாமல் அதன் பின் மூன்று படங்கள் நடித்துள்ளார்.

இவர் தற்போது ஜோதிகா நடித்த  ’36 வயதினிலே’ படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அவர் கன்னடம்  மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.இதைத் தொடர்ந்து திரையுலகில் வாய்ப்பு இல்லாத நிலையில் சீரியல் பக்கம் திரும்பியுள்ளார் அபிராமி. ‘கனா கண்மணி’ என்ற சீரியல் நடித்துள்ளார்.அபிராமிக்கு ஒரு மகன்,  ஒரு மகள் உள்ளனர்.

Advertisement

இவர்  முன்னதாக தனியார்  யூடியூப் சேனலுக்கு  பேட்டியளிருந்தார்.  அபிராமி அந்த பேட்டியில் தன்னுடைய காதல் கதையை பகிர்ந்தார்.நானும் ராகுலும் 14 வயதில் இருந்து நண்பர்கள். அதனால், எங்களுக்குள் ஒரு நல்ல புரிதல் இருந்தது. அவருடைய இடம் ஒரு வகையாகவும், என்னுடைய இடம் இன்னொரு வகையாகவும் இருந்தால் கூட, எங்களுக்குள் ஒரு பொதுவான இடம் இருப்பதை நாங்கள் எங்கள் வீட்டில் கண்டுபிடிப்போம்.

நான் ஒரு கதையை கேட்டு வந்து இவரிடம் சொன்னால், ஏதோ ஒரு நேர்காணலை கேட்டு வந்து சொன்னது போல, இந்தக்கேள்வியை கேட்டாயா, அந்தக் கேள்வியை கேட்டாயா? என்று கேட்பார். அவர் ரொம்ப க்யூட். தம்பதிகளாக இருக்கும் இருவர் ஒரே துறையில் பயணித்தால், அது ஏதோ ஒரே கூட்டுக்குள் இருந்தது போல இருக்கும்.

Advertisement

ஆகையால், இருவரும் தனித்தனித்துறைகளாக இருந்தால் நல்லது. பொதுவாக நடிகர்களுக்கு ஒரு ஆகாச விதமான மனநிலை இருக்கும். அதைப்பற்றி அவர் பேசும் போது, நீ ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கிறாய். அப்படி இருக்காமல், நிஜ வாழ்க்கைக்கு வா என்று சொல்வார். அவர் என்னுடைய உண்மைத்தன்மையை சோதனை செய்ய வைத்துக்கொண்டே இருப்பார்.என்று பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement