VIDEOS
“வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”…. மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்…. வைரலாகும் வீடியோ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். ரசிகர்களால் உலகநாயகன் என்று அறியப்படுபவர்.இவர் தசாவதாரம் திரைப்படத்தின் 9 கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். பல வருடங்களுக்குப் பிறகு உண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதே சமயம் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்திய 2 திரைப்படத்தின் நடித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் கமல்ஹாசன் அவர்களுக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என கேள்வி எழுந்தது.இதனிடையே கமல்ஹாசன் நேற்று உடல் நலம் தேறி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள டிஎஸ்பி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசும் போது தனக்கு லேசான இருமல் தான் என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருப்பது உறுதியாகி உள்ளது.
