VIDEOS
சன் டிவியில் புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஆலியா மானசா…. வெளியான ப்ரோமோ வீடியோ…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா. அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர்.
மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்போது சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆலியா மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அதாவது இவர் விஜய் டிவியிலும் சஞ்சு சன் டிவியில் சீரியல்களில் நடித்து வந்தனர்.இதனிடையே மீண்டும் ஆல்யா மானசா கர்ப்பமானதால் சீரியலில் இருந்து சற்று விலகினார்.
சமீபத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பே புதிய சீரியல் கமிட்டாகி இருப்பதாக ஆழியா மானசா தெரிவித்த நிலையில் தற்போது விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு சென்ற சீரியலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவர் நடிக்கும் சீரியலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இவர் நடிக்கும் சீரியலின் பெயர் இனியா ஆகும். அந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
