மெட்ரோ ரயிலில் பயணித்து பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகர்… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

மெட்ரோ ரயிலில் பயணித்து பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகர்… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…

Published

on

பாலிவுட் சினிமாவின் ஸ்மார்ட் அண்ட் ஹேன்ட்சம் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ஹ்ருத்திக் ரோஷன். இவர் தற்பொழுதும் ஏராளமான இளம் ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வருகிறார். நடிகர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஸ்பெஷல் விஷயங்கள் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள். அப்படி பாலிவுட் சினிமாவில் நடனத்திற்காக பெரிய அளவில் கொண்டாடப்படும் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.

1980ம் ஆண்டு ஆஷா என்ற திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஹிருத்திக். அதன்பிறகு தொடர்ந்து ஒரு 45 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கோயி மில் கயா, க்ரிஷ், தூம் மற்றும் ஜோதா அக்பர் போன்ற மாஸ் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  தற்பொழுதும் இவர் பல ஹிட் திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

Advertisement

ஹ்ருத்திக் ரோஷன் 2000ம் ஆண்டு இண்டீரியர் டிசைனரான சூசன் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்த நிலையில், 2014ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்த தம்பதிக்கு ஹிரேகான், ஹிருதன் என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர் தற்பொழுது மும்பை மெட்ரோ ரயிலில் பயணித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முதலில் யார் என அடையாளம் காணாத பொதுமக்கள் அவரை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் அதிர்ச்சியடைகின்றனர். இதைத்தொடர்ந்து அவருடன் செல்பீ புகைப்படங்களும் எடுத்துக் கொள்கின்றனர். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

 

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement