LATEST NEWS
இளம் வயதில் வெறித்தனமாக ஜிம் வொர்க் அவுட் செய்த கமல்ஹாசன்… பலரும் பார்க்காத புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். உலக அளவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் சுமார் 450 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் பிசியாக நடித்து வருகிறார். இயக்குனர் சங்கர் இயக்கும் இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து தற்போது ஸ்கெட்ச் வினோத் இயக்கத்தில் தனது 233 வது படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். அதன் பிறகு மணிரத்தினம் இயக்கம் 234 ஆவது திரைப்படத்தில் கமல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் இளம் வயதில் இருந்தே உடற்பயிற்சியில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.
தற்போது 68 வயதிலும் தனது உடலை வொர்க் அவுட் செய்து கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அவர் தனது இளம் வயதில் செய்த ஜிம் வொர்கவுட் புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
