CINEMA
பெண்களை தப்பா நினைச்சா அவ்ளோதான்…”நாங்களும் ரக்கடா இருப்போம்…ஒரே நாளில் ப்ளாஸ்டாக மாறிய சுபாஷின் வாழ்க்கை! தியேட்டர்களில் ப்ளாஸ்ட் திருவிழா… முதல் நாள் வசூலே அள்ளுது…!
கோலிவுட்டின் ‘ஜென் ஸி’ (Gen Z) தலைமுறையின் ஃபேவரைட் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, சினிமா உலகிற்குள் கால் பதித்திருப்பவர் சுபாஷ் கே. ராஜ். இவர் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்கியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. அறிமுக இயக்குநரின் படம் என்ற எந்தவொரு சுவடும் தெரியாத அளவிற்கு, முதல் காட்சியிலிருந்தே ரசிகர்களிடம் இருந்து படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இத்திரைப்படம் வெறும் ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே கொண்ட வணிகப் படமாக இல்லாமல், பெண்களுக்குத் தேவையான மிக முக்கியமான கருத்தையும் சமூகப் பொறுப்போடும் பேசியிருப்பது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. குறிப்பாக, எந்தவொரு படத்தையும் எளிதில் பாராட்டிவிடாத ப்ளூ சட்டை மாறனே கூட இந்தப் படத்திற்கு நேர்மறையான விமர்சனத்தைக் கொடுத்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர்கள், இதிலுள்ள சண்டைக் காட்சிகள் பட்டையைக் கிளப்புவதாகவும், இயக்குநர் சுபாஷுக்கு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது என்றும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் ‘பிளாஸ்ட்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சக்கைப்போடு போட்டு வருகிறது. பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கணித்துள்ள தகவலின்படி, படம் வெளியான முதல் நாளான நேற்று மட்டுமே மொத்தம் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. படம் அனைத்துத் தரப்பினரும், குறிப்பாகக் குடும்பங்களோடு வந்து பார்க்கும் வகையில் அமைந்துள்ளதால், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதன் வசூல் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”பெண்கள் அடித்தாலும் வலிக்கும்… பெண்தானே என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம், நாங்களும் ரக்கடாக இருப்போம்!”
இந்நிலையில், திரையரங்கில் படம் பார்த்துவிட்டு இயக்குநர் சுபாஷின் அம்மாவும், பெரியம்மாவும் நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. செய்தியாளர்களிடம் பேசிய சுபாஷின் அம்மா, “தன் பையன் திரையில் தெறிக்கவிட்டுவிட்டான்” என்றும், ஒரு கராத்தே மாணவியாகவும் டெய்லராகவும் தனக்கு இந்தப் படம் மிகவும் பெருமையளிப்பதாகவும் மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து பேசிய சுபாஷின் பெரியம்மா, “ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த உதாரணம்” என்று நெகிழ்ந்து கூறினார். தங்களது வீட்டுப் பிள்ளையின் இந்த இமாலய வெற்றியை ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடும் இந்தத் தாயுள்ளங்களுக்கு தற்போது இணையத்தில் வாழ்த்துகள் குவிகின்றன.
