டைவர்ஸ் ஆகி இத்தனை வருஷத்துக்கு அப்புறம் ரூ.120 கோடியா…பணப் பசிக்கு எல்லையே இல்லையா? ரூ.120 கோடி கேட்டு மிரட்டும் முன்னாள் மனைவி…சோஷியல் மீடியாவை அதிரவைத்த பாலாவின் வீடியோ…! – cinefeeds
Connect with us

CINEMA

டைவர்ஸ் ஆகி இத்தனை வருஷத்துக்கு அப்புறம் ரூ.120 கோடியா…பணப் பசிக்கு எல்லையே இல்லையா? ரூ.120 கோடி கேட்டு மிரட்டும் முன்னாள் மனைவி…சோஷியல் மீடியாவை அதிரவைத்த பாலாவின் வீடியோ…!

Published

on

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் பாலா. பாரம்பரியமிக்க சினிமா பின்னணியைக் கொண்ட இவர், பிரபல தயாரிப்பாளர் ஏ.கே. வேலனின் பேரன் மற்றும் இயக்குநர் ஜெயகுமாரின் மகன் ஆவார். தமிழில் ‘அன்பு’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, பின்னர் தனது சகோதரரும் பிரபல இயக்குநருமான சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வீரம்’ மற்றும் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ உள்ளிட்ட திரைப்படங்களில் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். திரையில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த பாலா, தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சட்ட ரீதியான விவகாரங்களால் சோஷியல் மீடியாவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளார்.

கடந்த காலங்களில் பாலாவின் திருமண வாழ்க்கை பல்வேறு திருப்பங்களைச் சந்தித்துள்ளது. 2008-ல் சந்தனா என்ற பெண்ணை மணமுடித்து 2009-ல் பிரிந்தவர், 2010-ல் பிரபல பாடகி அம்ருதாவைத் திருமணம் செய்து 2019-ல் விவாகரத்து பெற்றார். தொடர்ந்து 2021-ல் எலிசபெத் என்பவரை மணந்து 2024-ல் பிரிந்தார். தற்போது கோகிலா என்ற பெண்ணுடன் கடந்த 2 ஆண்டுகளாகச் சட்டப்படி திருமணம் செய்து கேரளா மாநிலம் கோட்டயத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் பாலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட உணர்ச்சிவசப்பட்ட வீடியோ ஒன்று சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அந்த வீடியோவில் பேசிய பாலா, கடந்த 10 ஆண்டுகளாகத் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், சட்டத்தின் பெயரால் ஒரு ஆண் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார். “இனி என்னை யாராவது துன்புறுத்தினால் பெரிய செய்தியாளர் சந்திப்பு நடத்தி எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்துவேன். இதற்கு பேசாமல் எங்களை விஷம் வைத்து கொன்றுவிடுங்கள்” என்று ஆவேசமாகப் பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி அவரது மனநிலை குறித்து ரசிகர்கள் கவலைப்படத் தொடங்கிய நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வைக்கம் சிவன் கோயிலில் இருந்து நேரலையில் தோன்றி பாலா விரிவான விளக்கம் அளித்துள்ளார்.”டைவர்ஸ் முடிந்து பல வருடங்கள் ஆகியும், முன்னாள் மனைவி இப்போது திடீரென ரூ.120 கோடி கேட்கிறார். நிலைமை இப்படியே நீடித்தால் நானும் என் மனைவியும் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை!”

நேரலையில் பேசிய பாலா, தானும் தனது தற்போதைய மனைவியும் சந்தோஷமாக இருப்பதாகவும், ஆனால் பழைய விஷயங்களை மனதில் வைத்து சிலர் சட்ட ரீதியான பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் குற்றம் சாட்டினார். விவாகரத்து வழக்கின் போது, “எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம், நானும் என் குழந்தையும் நிம்மதியாக வாழ்ந்தால் போதும்” என்று கூறிவிட்டுச் சென்ற முன்னாள் மனைவி பாடகி அம்ருதா, தற்போது நீதிமன்றம் மூலம் தொடர்பு கொண்டு ரூ.120 கோடி கேட்பதாகக் கூறி உடைந்து போயுள்ளார். தான் உடல்நலம் பாதிக்கப்பட்டுச் சாகக் கிடந்த சமயத்தில், பிழைத்து வந்தவுடனேயே தனது மகளின் பெயரில் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ததை நினைவுகூர்ந்த பாலா, தனக்கு இப்போது தேவை நிம்மதி மட்டும்தான் என்று கதறியுள்ளார். பாலாவின் இந்தக் குற்றச்சாட்டுகளும் கண்ணீரும் ஒட்டுமொத்த கேரளா மற்றும் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in