விஜய் தான் காரணம்… பிரஸ் மீட்டில் ஜூலி தூக்கிப்போட்ட ‘மிஸ்கேரேஜ்’ குண்டு…அன்று ‘வாடா பார்ப்போம்’… இன்று ‘வா அண்ணே’… குறும்படம்’ போட்டு தூக்கும் TVK தொண்டர்கள்…பிக் பாஸ் ஜூலியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்! – cinefeeds
Connect with us

CINEMA

விஜய் தான் காரணம்… பிரஸ் மீட்டில் ஜூலி தூக்கிப்போட்ட ‘மிஸ்கேரேஜ்’ குண்டு…அன்று ‘வாடா பார்ப்போம்’… இன்று ‘வா அண்ணே’… குறும்படம்’ போட்டு தூக்கும் TVK தொண்டர்கள்…பிக் பாஸ் ஜூலியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Published

on

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வியைச் சந்தித்த நிலையில், முதல்முறையாகத் தேர்தலை எதிர்கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் களத்தில் திமுகவுக்கு ஆதரவாகவும் தவெகவுக்கு எதிராகவும் ‘வீரமங்கையாக’ களம் இறங்கிய பிக் பாஸ் பிரபலம் ஜூலி, பெரம்பூர் தொகுதியில் விஜய்யை மிக மோசமான விமர்சனங்களுடன் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். “தைரியம் இருந்தா நேரில் வாடா பார்ப்போம்” என அவர் ஒருமையில் பேசிய பிரச்சாரங்கள், ஜூலிக்கு மட்டுமின்றி பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்த்துப் போட்டியிட்டவர்களுக்கே ‘பேக் ஃபயர்’ ஆகி பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று திடீரென பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய ஜூலி, தனக்கு ஏற்பட்ட ‘மிஸ்கேரேஜ்’ (கருச்சிதைவு) சம்பவத்திற்குக் காரணமே விஜய் தான் என்று அபாண்டமான பழியை தூக்கிப்போட்டார். ஆனால், ஆதாரமற்ற இந்தக் குற்றச்சாட்டைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளர்கள், அடுக்கடுக்கான கேள்விகளால் ஜூலியை அங்கேயே துளைத்தெடுத்தனர். மேலும், அதே பிரஸ் மீட்டில் தான் விஜய்யை ஒருமையில் பேசவே இல்லை என்றும், “வா அண்ணே பார்ப்போம்” என்றுதான் கூப்பிட்டேன் என்றும் ஜூலி மழுப்பலாகப் பேசினார்.

Advertisement

இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள், ஜூலி தேர்தல் பிரச்சாரத்தில் விஜய்யை “வாடா பார்ப்போம்” என ஒருமையில் வம்புக்கு இழுத்த பழைய வீடியோக்களைத் தோண்டியெடுத்து, ‘குறும்படங்களாக’ சமூக வலைதளங்களில் வைரலாக்கிப் பொளந்து கட்டி வருகின்றனர். “யாகாவார் ஆயினும் நா காக்க” என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, மற்றவர்களை விமர்சிக்கும் போது நாவடக்கத்தைக் கையாளாவிட்டால் இப்படித்தான் நெட்டிசன்களிடம் சிக்கித் தவிக்க நேரிடும் என ஜூலியை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே கமல்ஹாசன் காட்டிய குறும்படத்தில் பொய் பேசி மாட்டிக்கொண்ட ஜூலி, தற்போது நிஜ வாழ்க்கையிலும் மீண்டும் பொய் பேசி நெட்டிசன்களிடம் சிக்கிக்கொண்டார் என மீம்கள் மூலம் தவெகவினர் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in