LATEST NEWS
“என் உயிருக்கு ஆபத்து” தமிழக அரசியலை உலுக்கிய குதிரை பேர ஆடியோ விவகாரம்… தவெக எம்.எல்.ஏ சரவணனை சுற்றி வளையும் உளவுத்துறை.. பெரும் பரபரப்பு..!
ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ சரவணன் தன்னிடம் திமுகவில் இணைய ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை குதிரை பேரம் பேசப்பட்டதாக ஆடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான் அடிமட்டத்திலிருந்து வந்து எம்.எல்.ஏ ஆனதை பொறுக்காமல், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் தன்னை பதவியை ராஜினாமா செய்யக் கோரி மிரட்டுவதாக சரவணன் பகிரங்கமாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ள நிலையில், இந்த ஆடியோ லீக் விவகாரம் தீவிரமடைந்துள்ளதால் மாநில உளவுத்துறை அதிகாரிகள் எல்.எல்.ஏ சரவணனிடம் நேரடியாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது உயிருக்கு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் அச்சம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஏரலில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.
