“அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாமா?”.. தவெக-வை டார்கெட் செய்து உதயநிதி போட்டமாஸ் ட்வீட்.. ன்னணியில் இருக்கும் சீக்ரெட்… அலறும் அரசியல் களம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாமா?”.. தவெக-வை டார்கெட் செய்து உதயநிதி போட்டமாஸ் ட்வீட்.. ன்னணியில் இருக்கும் சீக்ரெட்… அலறும் அரசியல் களம்..!!!

Published

on

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் மகனும், முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்று, தற்போது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து, அக்கட்சியையும் முதலமைச்சர் விஜயையும் அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் தனது மகன் இன்பநிதியின் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகத் தந்தை மு.க. ஸ்டாலினுடன் லண்டன் சென்றிருந்த உதயநிதி, அந்த நிகழ்வை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.

சென்னை திரும்பிய நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி 47-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கொள்கைப்படி மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு முன்னெடுக்கக் காத்திருக்கும் இளைஞரணியின் அடுத்த ‘இன்னிங்ஸை’ ஆரம்பிக்கலாமா?” எனக் குறிப்பிட்டு, கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்த அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in