வயசானாலும் ஆட்டம் குறையல…! இங்கிலாந்தில் மாஸ் காட்டிய ஜாம்பவான்கள்… மீண்டும் எப்போது களமிறங்குகிறார்கள்..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வயசானாலும் ஆட்டம் குறையல…! இங்கிலாந்தில் மாஸ் காட்டிய ஜாம்பவான்கள்… மீண்டும் எப்போது களமிறங்குகிறார்கள்..?!

Published

on

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இழந்தாலும், அனுபவ வீரர்களான விராட் கோலியும் ரோகித் சர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் போட்டியில் சொதப்பிய விராட் கோலி, அடுத்த இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்தார்.

முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பியதால் ரோகித் சர்மா ஓய்வு பெறப்போவதாக வதந்திகள் பரவின. ஆனால், 3-வது போட்டியில் 138 ரன்கள் விளாசி அதிரடி சதமடித்த அவர் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இது அவருடைய 34-வது ஒருநாள் சதமாகும். மேலும், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும், இங்கிலாந்து மண்ணில் தனது 8-வது ஒருநாள் சதத்தையும் பதிவு செய்தார்.இதனால், ரசிகர்கள் ‘வயசானாலும் உங்க ஆட்டம் போகல..’எனப் புகழ்ந்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில், இந்தியா தனது அடுத்த ஒருநாள் போட்டியை செப்டம்பர் கடைசி வாரத்தில் விளையாட உள்ளது. இதனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்த இரண்டு மாதங்களுக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாடமாட்டார்கள். செப்டம்பர் 27 அன்று தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட உள்நாட்டு ஒருநாள் தொடரின் மூலம் அவர்கள் மீண்டும் களமிறங்க உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in