LATEST NEWS
கலியுக சிரவண குமார் இவர் தான்ப்பா..! பெற்ற தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற.. பாத்திரத்தில் வைத்து தலையில் சுமந்து சென்ற மகன்… வைரல் வீடியோவால் நெட்டிசன்கள் பாராட்டு..!!
மதுரா பிருந்தாவனத்தில் உள்ள புகழ்பெற்ற பாங்கே பிஹாரி கோவிலுக்கு, நடக்க முடியாத தனது வயதான தாயை ஒரு பெரிய பாத்திரத்தில் அமர வைத்து, அதனைத் தன் தலையில் சுமந்தபடி தரிசனத்திற்காக அழைத்து வந்த மகனின் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தன் தாயால் சொந்தமாகக் காலடி எடுத்து வைத்து நடக்க முடியாத சூழலில், எப்படியாவது அவருக்குக் கடவுள் தரிசனம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக அந்த நபர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
https://twitter.com/Pahadi_Varsha/status/2095038755388432547/video/1
இந்தக் காட்சியைக் காண்பவர்களில் ஒரு தரப்பினர், “அளவற்ற பக்தி என்ற பெயரில் இது ஒரு குருட்டுத்தனமான செயல்” என்றும், கோவிலில் உள்ள கூட்ட நெரிசலில் முதியவரை இப்படி அழைத்து வருவது ஆபத்தானது என்றும் விமர்சிக்கின்றனர். ஆனால், மற்றொரு தரப்பினரோ, “பெற்ற தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் இவர்தான் இந்த கலியுகத்தின் ‘சிரவண குமார்’ (பெற்றோரைத் தோளில் சுமந்த புராணக் கதாபாத்திரம்)” என்று பாராட்டி வருகின்றனர். எது எப்படியிருந்தாலும், தம்மைக் பெற்றெடுத்த பெற்றோரின் இறுதி ஆசைகளைத் தம்மால் முடிந்த வழிகளில் நிறைவேற்றிக் கொடுப்பது ஒவ்வொரு மகனின் மிக முக்கியக் கடமையாகும்.
