LATEST NEWS
“வாழ்ந்தால் ஒன்றாகத்தான் வாழ்வோம்…”அடம் பிடித்த தோழிகள்.. காதலை எதிர்த்த பெற்றோரால் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் ஸ்டேஷனில் நடந்த பகீர் சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், உறவினர்களான இரண்டு இளம்பெண்களுக்கு இடையே உருவான காதல் விவகாரம், காவல் நிலையத்திலேயே விஷம் குடிக்கும் அளவுக்குச் சென்று பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர்களான இந்த இரண்டு பெண்களுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இவர்களது உறவுக்கு இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து பேசித் தீர்ப்பதற்காக இருவரும் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு காவல்துறையினர் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் இரு பெண்களுக்கும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
கவுன்சிலிங்கின் போது, தாங்கள் இருவரும் தீவிரமாகக் காதலிப்பதாகவும், வாழ்ந்தால் ஒன்றாகவே வாழ்வோம் என்றும் உறுதியாகக் கூறியுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக இருவரும் திடீரெனத் தாங்கள் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்து சுருண்டு விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலிஸார் உடனடியாக இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ராஜஸ்தான் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
