“1 அல்ல.. 2 அல்ல.. சட்டத்தையே மீறி 13 குழந்தைகளை பெற்ற நபர்…” அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“1 அல்ல.. 2 அல்ல.. சட்டத்தையே மீறி 13 குழந்தைகளை பெற்ற நபர்…” அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

Published

on

சீனாவில் வசித்து வரும் 49 வயதான நபர் ஒருவர், அந்நாட்டின் குழந்தை கொள்கை சட்ட விதிமுறைகளை மீறி 13 குழந்தைகளை பெற்று, அவர்களை பள்ளிகளில் படிக்க வைத்து வளர்த்து வரும் நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சீனாவின் குவாங்சி சுவாங் பகுதியில் உள்ள கின்சோ என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹூவாங் என்பவர், தனது 27-வது வயதில் 20 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சீனாவில் 1970களின் பிற்பகுதியில் இருந்து 2015-ஆம் ஆண்டின் இறுதி வரை ‘ஒரு குழந்தை கொள்கை’ நடைமுறையில் இருந்தது. பின்னர் 2021-ல் ‘மூன்று குழந்தைகள்’ வரை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட நிலையிலும், இவர் தொடர்ந்து குழந்தைகளை பெற்றுக் கொள்ளத் தொடங்கினார். முதலில் 2 பெண் குழந்தைகள், அடுத்து 8 ஆண் குழந்தைகள் பிறந்த பிறகு, அரசாங்க அதிகாரிகள் இவர் மீது பல தண்டனைகளை விதித்தனர்; இருப்பினும் பின்வாங்காமல் மேலும் 3 பெண் குழந்தைகளை பெற்று மொத்தம் 13 குழந்தைகளுக்கு தந்தையானார்.

தனக்கு பல குழந்தைகள் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், பிள்ளைகள் தன்னை அப்பா என்று அழைப்பதைக் கேட்பதும், முதிர்வயதில் தனிமையாக இல்லாமல் இருக்கவும் இது உதவுவதாக ஹூவாங் தெரிவித்துள்ளார். இந்த குழந்தைகளை வளர்ப்பதற்காக இவர் விவசாய வேலை செய்து நெல் பயிரிட்டு வருகிறார். இதன் மூலம் மாதந்தோறும் சுமார் 50,000 ரூபாய் வரை அரசாங்கம் மானியமாக அளித்து வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டில் கட்டுமான தளத்தில் நடந்த விபத்தில் கால் மற்றும் இடுப்பில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சுமார் 14 லட்சம் ரூபாய் வரை செலவான போதிலும், குடும்பத்தைக் காப்பாற்ற நாள் முழுவதும் வேலை செய்து வருகிறார்.

Advertisement

ஹூவாங்கின் 22 வயதான மூத்த மகளுக்குத் திருமணம் முடிந்துவிட்ட நிலையில், அவரின் இரண்டாவது மகள் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். மற்ற குழந்தைகள் பள்ளிகளில் படித்து வருகின்றனர். சீன அரசின் கடுமையான சட்டத் திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் 13 குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் இந்த ஹூவாங் குடும்பம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி, தற்போது கலவையான விமர்சனங்களைப் பெற்று வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in