பாசக்கார கொள்ளைக்காரி..! கால்களைத் தொட்டு கும்பிட்டு மூதாட்டியை ஏமாற்றிய பலே திருடி.. பகீர் சிசிடிவி வீடியோ வைரல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாசக்கார கொள்ளைக்காரி..! கால்களைத் தொட்டு கும்பிட்டு மூதாட்டியை ஏமாற்றிய பலே திருடி.. பகீர் சிசிடிவி வீடியோ வைரல்..!!

Published

on

கனடாவின் பிராம்ப்டன் நகரில் மாலை நேர நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 78 வயதான இந்திய வம்சாவளி மூதாட்டி ஒருவரிடம், காரில் வந்த பெண் ஒருவர் பாசமாக நடிப்பது போல் நடித்து நகைகளைக் கொள்ளையடித்துள்ளார். ஜூலை மாத இறுதியில் நடந்த இந்தச் அதிர்ச்சிச் சம்பவம், டொராண்டோ காவல்துறை சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட பிறகே தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

https://twitter.com/i/status/2103911485026283767

Advertisement

பாதிக்கப்பட்ட மூதாட்டியின் அருகே காரை நிறுத்திய அந்தப் பெண், கீழே இறங்கி வந்து மூதாட்டியின் கால்களைத் தொட்டு வணங்கி, கட்டிப்பிடித்து அன்பாகப் பேசியுள்ளார். ஆங்கிலம் சரளமாகத் தெரியாததால் அவர் பக்கத்து வீட்டுப் பெண் என மூதாட்டி நம்பியுள்ளார். அந்தச் சமயம் மூதாட்டிக்குத் தெரியாமல் அவரது கழுத்தில் இருந்த உண்மையான தங்க நெக்லஸைக் கழற்றிவிட்டு, அதற்குப் பதிலாக போலி நகையை மாட்டிவிட்டு, கையில் இருந்த வளையல்களையும் திருடிக்கொண்டு காரில் தப்பியோடியுள்ளார்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தால் அந்த மூதாட்டி கடுமையான மன அதிர்ச்சிக்கும் உடல்நலக் குறைவிற்கும் ஆளாகியுள்ளார் என அவரது மகன் வேதனை தெரிவித்துள்ளார். திருடப்பட்ட நகைகள் 1971-ல் அவரது திருமணப் பரிசாகக் கிடைத்தது என்றும், சம்பவம் நடந்து பல மாதங்கள் கடந்தும் காவல்துறை விசாரணையில் தொய்வு நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அந்தப் பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in