LATEST NEWS
“விஜய் எடுத்த ‘அந்த’ ஒரு முடிவு..”. இரண்டு பிரிவுகளாக உடைந்த தவெக நிர்வாகிகள்.. தளபதி கோட்டையில் வெடித்த பயங்கர மோதல்.. வெளியான பரபரப்பு தகவல்..!!
தமிழக வெற்றி கழகத்தில் அண்மையில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு புதிய பதவிகள் அள்ளி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியும் சலசலப்பும் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. குறிப்பாக, திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களால், மடத்துக்குளம் மற்றும் உடுமலை ஆகிய பகுதிகளில் கட்சியின் பழைய மாவட்ட செயலாளரான திருமலை போன்ற நிர்வாகிகளின் அதிகாரம் மற்றும் முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக உள்கட்சிப் பூசல்கள் வெடித்துள்ளன.
இதேபோல், கடலூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக இருக்கும் ராஜ்குமாரின் செல்வாக்கு மண்டலத்திற்குள், தற்போது துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத்தின் வரவு பெரும் சவாலாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் உழைத்த பழைய தவெக நிர்வாகிகளைப் புறக்கணித்துவிட்டு, மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் முக்கியப் பொறுப்புகளை வழங்குவதாக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. இதனால் தேர்தல் வரை உழைத்தவர்கள் ஒரு அணியாகவும், தேர்தலுக்குப் பின் கட்சியில் இணைந்து பதவிகளைப் பெற்றவர்கள் ஒரு அணியாகவும் பிரிந்து, தவெக இரண்டுபடும் சூழல் உருவாகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் வாயிலாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன
