“ரூமிற்குள் ஒரு பெண் ரெடியா இருக்கா..!” ரகசிய குரூப்பில் வந்த அருவருப்பான மெசேஜ்.. 19 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ரூமிற்குள் ஒரு பெண் ரெடியா இருக்கா..!” ரகசிய குரூப்பில் வந்த அருவருப்பான மெசேஜ்.. 19 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

அமெரிக்காவின் புகழ்பெற்ற கார்னெல் பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு தன் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, முன்னாள் மாணவி ஒருவர் தற்போது இழப்பீடு கோரி சிவில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் இல்லத்திற்குச் சென்றிருந்த அப்போதைய 20 வயது மாணவிக்கு, அங்கிருந்த இரு மாணவர்கள் கட்டாயப்படுத்தி போதைப்பொருள் கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளனர். பின்னர், அந்த அமைப்பின் ரகசிய சமூக ஊடகக் குழுவில் “ஒரு பெண் பாலியல் பயன்பாட்டிற்குத் தயாராக உள்ளார்” என அருவருப்பான குறுஞ்செய்தி அனுப்பி, அடுத்தடுத்து பல மாணவர்கள் அங்கு வந்து பல மணி நேரம் அந்தப் பெண்ணைச் சம்மதமின்றி வன்கொடுமை செய்ததாக நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு அந்த மாணவி தனது படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியுள்ளார். மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான 7 மாணவர்களில் 2 பேரை மட்டுமே பல்கலைக்கழகம் நீக்கியுள்ளதாகவும், மற்றவர்களுக்குக் கட்டுரை எழுதுதல் போன்ற அற்பமான தண்டனைகளை மட்டுமே வழங்கிப் பல்கலைக்கழக நிர்வாகம் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் மாணவியின் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி முன்னதாக மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் குற்றவியல் வழக்கை முடித்து வைத்திருந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் சிவில் வழக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளதோடு, பழைய குற்றவியல் விசாரணையும் நியூயார்க்கில் மீண்டும் தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்படத் தொடங்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in