“அந்த ஒரே ஒரு வீடியோதான் என்னை தூண்டியது..” பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் நகை கொள்ளை… கைதான வாலிபரின் பகீர் வாக்குமூலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அந்த ஒரே ஒரு வீடியோதான் என்னை தூண்டியது..” பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் நகை கொள்ளை… கைதான வாலிபரின் பகீர் வாக்குமூலம்..!!

Published

on

ரூ.30 லட்சம் கடனில் சிக்கி தவித்துக்கொண்டிருந்த நிலையில் நகை-பணத்துடன் கூடிய மதுமிதாவின் ‘ரீல்ஸ்’ தன்னை கொள்ளையடிக்க தூண்டியதாக இந்த வழக்கில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். மதுமிதாவின் சமூக வலைத்தள கணக்கை பின்தொடர்பவர்களில் ஒருவரான இசக்கிபாண்டி நகை, பணம் குறித்த வீடியோக்களை பார்த்து அதன் மூலம் ஈர்க்கப்பட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளார். மேலும் சாட்டிங் மூலம் மதுமிதாவிடம் அதிக வருமானம் பெறுவது எப்படி? என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை கேட்டறிந்த இசக்கிபாண்டி அவரை நேரில் சந்திக்க கேட்டு முகவரி தொடர்பான விவரங்களையும் அறிந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இசக்கிபாண்டி போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- எனக்கு ரூ.30 லட்சம் கடன் இருந்தது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தனர். இதனால் கடனை அடைக்க வழி தெரியாமல் தவித்தேன். அப்போது மதுமிதா தனது வீட்டில் நகை, பணம் அதிகமாக இருப்பது போன்ற வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்ததை பார்த்தேன். இதனால் அவரது வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்தேன். ஆசாரிபள்ளத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த ஒருமாதமாக தங்கி இருந்து மதுமிதாவின் வீட்டில் கொள்ளையடிக்க நோட்டமிட்டேன். மதுமிதாவின் வீடு எங்கு உள்ளது என்பதை அறிய தனது மகளின் மழலை பள்ளியின் முகவரி அவர் வெளியிட்ட வீடியோவில் இருந்தது. இதன் மூலம் மதுமிதாவின் வீட்டை எளிதாக கண்டுபிடித்தேன். வீட்டில் அவரது கார் இருந்தால் உள்ளே ஆட்கள் இருக்கிறார்கள், என நினைத்து கொள்வேன். சம்பவத்தன்று நான் மதுமிதாவின் வீட்டைநோட்டமிட்டபோது கார் இல்லாததால் வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்துகொண்டேன். பின்னர் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று மரத்தை அறுக்கும் எந்திரத்தால் கதவை அறுத்து உடைத்து உள்ளே சென்றேன்.

Advertisement

மதுமிதா ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியீட்டு இருந்ததால் அவரது வீட்டின் அமைப்பு, அறைகள், எந்த இடத்தில் பீரோ, கட்டில்கள் உள்ளன என்பதை தெரிந்து வைத்திருந்தேன். இது நகைகளை கொள்ளையடிக்க எனக்கு நல்ல வசதியாக இருந்தது. பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றேன். நண்பர்களின் உதவியுடன் கொள்ளையடித்த நகைகளை விற்றுப்பணமாக்கி கடனை அடைத்து விட்டு வேறு ஊருக்கு சென்று விடலாம் என நினைத்தேன். சில நகைகளை நண்பர்கள் உதவியுடன் விற்றேன். இதற்கிடையே கொள்ளை சம்பவம் குறித்து பத்திரிகை, தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்ததை பார்த்ததும் எங்கே போலீசில் மாட்டிக்கொள்வோமோ? என்று நான் அச்சமடைந்தேன். இதனால் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக வீட்டில் இருந்த பை, உடைமைகளை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றபோது போலீசார் என்னை கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார். கொள்ளையடித்த பிறகு ஊருக்கு சென்ற இசக்கிபாண்டி தன்னை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மொட்டை அடித்துள்ளார். ஆனால், போலீசார் சாமார்த்தியமாக செயல்பட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அவரை பிடித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in