“போஸ்ட்மார்ட்டம் செஞ்சா தீக்குளிப்பேன்..” ஆபாச வீடியோ காட்டி சித்ரவதை செய்த கணவன்… 14 வயது மகனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று நாடகமாடிய தவெக பெண் நிர்வாகி… திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“போஸ்ட்மார்ட்டம் செஞ்சா தீக்குளிப்பேன்..” ஆபாச வீடியோ காட்டி சித்ரவதை செய்த கணவன்… 14 வயது மகனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று நாடகமாடிய தவெக பெண் நிர்வாகி… திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, குடிபோதையில் பாலியல் வீடியோக்களைக் காட்டித் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்த கணவனைக் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு இயற்கையான மரணம் என நாடகமாடிய தவெக பெண் நிர்வாகியும் அவரது 14 வயது மகனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியும் ரியல் எஸ்டேட் பைனான்ஸ் தொழில் செய்பவருமான சுரேஷ் (43), தனது மனைவி பாரதியிடம் (37) மதுபோதையில் தகராறு செய்து, செல்போனில் பாலியல் வீடியோக்களைக் காட்டித் துன்புறுத்தியதுடன் சிகரெட்டால் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட பாரதியும் அவரது 14 வயது மகனும் சேர்ந்து, சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்த சுரேஷின் கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொன்றுள்ளனர்.

Advertisement

இதனை மாரடைப்பு மரணம் என நம்பவைத்து அவசர அவசரமாக உடலை அடக்கம் செய்ய முயன்றபோது, கழுத்தில் இருந்த தழும்புகளைக் கண்ட பூதப்பாண்டி போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு முயன்றனர். அப்போது பாரதி தீக்குளிப்பேன் என மிரட்டியதும், சிசிடிவி கேமராக்கள் ஆஃப் செய்யப்பட்டிருந்ததும் போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தீவிர விசாரணைக்குப் பிறகு உண்மையை ஒப்புக்கொண்ட பாரதியையும் அவரது சிறுவன் மகனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in