“என் அக்கா எங்க..?” கதறி அழுத 7 வயது தம்பி.. டியூசனுக்கு நடந்தே சென்ற சிறுமியை பலி வாங்கிய அதிவேக கார்..! நெஞ்சை பதற வைக்கும் சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் அக்கா எங்க..?” கதறி அழுத 7 வயது தம்பி.. டியூசனுக்கு நடந்தே சென்ற சிறுமியை பலி வாங்கிய அதிவேக கார்..! நெஞ்சை பதற வைக்கும் சோகம்..!!

Published

on

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் – ஸ்வப்னா தம்பதியின் 12 வயது மகள் திவா, தனது 7 வயது தம்பியுடன் சனிக்கிழமை மாலை டியூசனுக்குச் சென்று கொண்டிருந்தபோது ஒரு சோகமான விபத்து நிகழ்ந்துள்ளது. எடவகை ரெண்டேனால் பகுதியில் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது பலமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் சிறுமி திவா காரின் வேகத்தில் தூக்கி வீசப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக அவரது தம்பி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுமி திவா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மானந்தவாடி காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநரான சஜி என்பவரைக் கைது செய்துள்ளனர்.டியூசனுக்குச் சென்ற சிறுமி விபத்தில் பலியான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in