LATEST NEWS
“ஐயா.. என் அம்மாவை காப்பாத்துங்க..!” ஓடும் ரயிலில் பாய முயன்ற தாய்… கடைசி நொடியில் பாய்ந்து ஸ்டேஷன் மாஸ்டர் செய்த காரியம்… மிரளவைக்கும் வீடியோ..!!
தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் உர்குரா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலின் முன்பாகக் குதித்து தற்கொலை செய்ய முயன்ற பெண் ஒருவர், அங்கிருந்தவர்களின் துரித நடவடிக்கையால் கடைசி நொடியில் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். தனது இரண்டு குழந்தைகளுடன் அந்தப் பெண் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் விபரீத முடிவெடுக்க முயன்றதை உணர்ந்த அவரது பிள்ளைகள், உடனடியாக ஓடிச் சென்று அங்கிருந்த ரயில் நிலைய அதிகாரி ஆனந்த் உபாத்யாயாவிடம் விபரத்தைக் கூறி உதவி கேட்டுள்ளனர்.
பிள்ளைகளின் எச்சரிக்கையைக் கேட்டுச் சற்றும் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்து ஓடிய ரயில் நிலைய அதிகாரி ஆனந்த் உபாத்யாயா, தண்டவாளத்தை நோக்கிச் சென்ற அந்தப் பெண்ணை மிக லாவகமாகப் பிடித்துப் பாதுகாப்பான இடத்திற்கு இழுத்து வந்துள்ளார். இந்த ஒட்டுமொத்த திடுக்கிடும் சம்பவமும் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பிஞ்சு குழந்தைகளின் சாதுரியத்தாலும், ரயில் நிலைய அதிகாரியின் மின்னல் வேக அதிரடி நடவடிக்கையாலும் ஒரு மிகப்பெரிய விபரீதம் கடைசி நொடியில் தவிர்க்கப்பட்டுள்ளது.
