அடச்சீ.. யோகா என்ற பெயரில் மாணவிகளை அநாகரிகமாக தொட்ட காமுக ஆசிரியர்.. புகாரளித்தும் ஹச்.எம் செய்த ‘அந்த’ காரியம்.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CINEMA

அடச்சீ.. யோகா என்ற பெயரில் மாணவிகளை அநாகரிகமாக தொட்ட காமுக ஆசிரியர்.. புகாரளித்தும் ஹச்.எம் செய்த ‘அந்த’ காரியம்.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தின் பெலிபேரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில், யோகா மற்றும் உடற்கல்வி வகுப்புகளின் போது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த விளையாட்டு ஆசிரியர் ஒருவரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆசிரியர், கடந்த சில காலமாகவே யோகா கற்றுக்கொடுப்பதாகக் கூறி பல்வேறு வகுப்பு மாணவிகளின் உடலில் தவறான நோக்கத்தில் அநாகரிகமாகத் தொட்டு அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த பயமும் மன உளைச்சலும் அடைந்த மாணவிகள், சமீபத்தில் இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் அழுதுகொண்டே விபரத்தைக் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர், முதலில் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் தாய் பெலிபேரா காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற அடுத்த கணமே பள்ளிக்கு விரைந்த போலீஸார், அந்த விளையாட்டு ஆசிரியரைப் பள்ளியிலேயே வைத்து மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இதற்கிடையில், ஜார்கிராமின் ஜாம்போனி பகுதியிலும் மற்றொரு அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு நோய்களைக் குணப்படுத்துவதாகவும், வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதாகவும் கூறிப் பெண்களை ஏமாற்றி வந்த போலி சாமியார் ஒருவன், குளிக்கும்போது ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக அளித்த புகாரின் பேரில், ஜாம்போனி போலீஸார் அந்தப் போலி சாமியாரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in