LATEST NEWS
“இது என்னடா கூத்து..!” இன்ஸ்டாவில் காதலியின் புகைப்படத்தைப் பார்த்து காதலித்த வாலிபர்.. ஆனா பூங்காவில் நடந்த அல்டிமேட் ட்விஸ்ட்.. வைரல் சம்பவம்..!!
கொரோனா காலத்தில் கணவனை இழந்து, தனது இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணமாகித் தனியாக வசித்து வந்த 50 வயதுடைய ஊர்மிளா தேவிவான் என்ற பெண்மணி, சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தனது புகைப்படங்களை இளமையாக மாற்றிப் பதிவிட்டு வந்துள்ளார். அந்தப் புகைப்படங்களைப் பார்த்த 27 வயது வாலிபர் ஒருவர், ஊர்மிளா மீது காதல் வயப்பட்டுள்ளார். இருவரும் முதலில் சமூக வலைத்தள அரட்டையிலும், பின்னர் தொலைபேசி வாயிலாகவும் தொடர்ந்து பேசித் தங்களது நெருக்கத்தை வளர்த்துக் கொண்டனர். ஒருகட்டத்தில், அந்த வாலிபர் ஊர்மிளாவை நேரில் சந்திப்பதற்காக ஒரு பூங்காவிற்கு அழைத்ததை அடுத்து, இருவரும் திட்டமிட்டபடி சந்திக்கச் சென்றுள்ளனர்.
ஆனால், பூங்காவில் ஊர்மிளாவை நேரில் பார்த்த அந்த வாலிபர், புகைப்படத்தில் இருந்த 20 வயது இளம்பெண்ணிற்குப் பதிலாக 50 வயதுப் பெண்மணி நிற்பதைக் கண்டு அதிர்ச்சியில் மயங்கி விழாத குறையாக உறைந்து போனார். உடனடியாக அந்தப் பெண்மணிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, அங்கிருந்த ஒரு குறுகிய சந்து வழியாக அலறியடித்துக் கொண்டு தப்பியோடினார். கணவனை இழந்த பெண்கள் தங்களது வாழ்க்கையை மறுபடியும் புதிதாகத் தொடங்குவதில் எந்தத் தவறும் இல்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் உண்மைப் புகைப்படங்களை மறைத்து, ஏஐ தொழில்நுட்பம் மூலம் மற்றவர்களை ஏமாற்றுவது சரியான செயல் அல்ல என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
