CRIME
“தேர்வு எழுத விடமாட்டேன்..!” ஆசைக்கு இணங்காத 15 வயது சிறுமியை மிரட்டி பயிற்சியாளர் செய்த கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பெத்த ஏலசகிரி பகுதியைச் சேர்ந்த கல்வித்துறை பயிற்சியாளர் ஜெயராம் (52) என்பவர், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக ஓசூர் அனைத்து மகளிர் காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சூளகிரி பகுதியில் பணியாற்றி வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு திருமணமான பெண்ணிடம் கடந்த 3 ஆண்டுகளாகத் தகாத முறையில் பேசி பாலியல் ரீதியாக வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, அப்பெண்ணின் 15 வயது மகளிடமும் ஜெயராம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் சிறுமியைப் பள்ளியில் தேர்வு எழுத விடாமல் தடுத்து விடுவதாகவும், சிறுமியின் சகோதரனை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விடாமல் செய்து விடுவதாகவும் ஜெயராம் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, நடந்த விவரங்களைப் பெற்றோரிடம் கூற, அதிர்ச்சியடைந்த அவர்கள் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயராமை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
