“ஆசிரியரா இல்ல மனித மிருகமா..?” பள்ளிக்குத் தள்ளாடியபடி வந்த ‘குருஜி’ செய்த அசுரத்தனமான கொடூரம்.. ஆசிரியரின் போதையை அம்பலப்படுத்திய ‘அந்த’ ஒற்றை வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆசிரியரா இல்ல மனித மிருகமா..?” பள்ளிக்குத் தள்ளாடியபடி வந்த ‘குருஜி’ செய்த அசுரத்தனமான கொடூரம்.. ஆசிரியரின் போதையை அம்பலப்படுத்திய ‘அந்த’ ஒற்றை வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டத்தின் சியானா தாலுகா, ஊஞ்சாகான் ஒன்றியத்திற்குட்பட்ட மஹுவாகேடா கிராம அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் பள்ளிக்கு வந்து மாணவர்களைக் கொடூரமாக வதைத்த நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘குருஜி’ என்று அழைக்கப்படும் அந்த ஆசிரியர் பள்ளி நேரத்திலேயே முழு போதையில் இருந்ததை கவனித்த உள்ளூர் இளைஞர் ஒருவர், அவரைத் தட்டிக்கேட்டு ஒட்டுமொத்த சம்பவத்தையும் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், பள்ளிக்கு மது குடித்துவிட்டு வந்ததோடு மட்டுமன்றி, ஒரு பிஞ்சு குழந்தையை வகுப்பறையின் கூரை மின்விசிறியில் தலைகீழாகத் தொங்கவிட்டதாக அந்த ஆசிரியர் மீது மிகக் கொடூரமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கல்வி கற்கும் புனிதமான இடத்தில் அரங்கேறிய ஆசிரியரின் இந்த அசுரத்தனமான அராஜகம் தற்பொழுது இணையதளத்தில் காட்டுத்தீயாய் பரவி, பெற்றோர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போதையில் தள்ளாடியபடியே மாணவர்களின் உயிரோடு விளையாடிய அந்தப் பொறுப்பற்ற போலி ஆசிரியரின் செயலைக் கண்டித்து, அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வைரல் வீடியோ குறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in