“ஐயோ பாவம்.. மரத்தடியில் நின்ற தவெக நிர்வாகி..” திடீரென பாய்ந்த எமன்.. இறுதியில் நேர்ந்த கொடூர சோகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ பாவம்.. மரத்தடியில் நின்ற தவெக நிர்வாகி..” திடீரென பாய்ந்த எமன்.. இறுதியில் நேர்ந்த கொடூர சோகம்..!!

Published

on

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின்நிர்வாகியான மகேந்திரன் என்பவர், நேற்று பெய்த பலத்த மழையின் போது விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மழையிலிருந்து தப்பிப்பதற்காக அவர் அங்கிருந்த ஒரு மரத்தடியில் தஞ்சம் புகுந்து அமர்ந்திருந்த வேளையில், எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு உடனடியாக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இருப்பினும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த தவெக நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இச்சம்பவம் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in